Monday 27 September, 2010

ஆசை கொள்

ஆசைப்படு-அனைத்தின் மீதும் ஆசைப்படு. ஆசையே  அனைத்து துன்பத்திற்கும் அடிப்படை ஆகவே ஆசையை ஒழித்து விடு என்றார் புத்த மகான். கனவு காண் என்றார் மரியாதைக்குரிய கலாம். ஆனால் ஆசையை ஒழித்தலும் கனவு கண்பதும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வழிவகுக்காது.  எனவே ஆசைப்படு. பதவி மேல் ஆசைப்படு. ஆம் பதவி மேல் ஆசைப்படு.

பதவி- பதவி என்று நான் குறிப்பது.
1 ப- பசித்திரு;  ஆம் எப்பொழுதும் பசித்திரு. பசித்தால்தான் உணவு தேடும் முயற்சி உன்னிடம் உருவாகும். இங்கு பசி என்று குறிக்கப்படுவது வயிற்று பசி அல்ல. அறிவு பசி. அறிவு பசிக்கு முடிவே கிடையாது. முடிவு இல்லாதவரை உன் தேடல் தொடரும் தொடர வேண்டும்.

2-த-- தனித்திரு.-ஆம் தனித்திரு. ஆயிரம்பேர் இருக்கும் இடத்திலும் உன் இருப்பு தனியாக தெரிய வேண்டும். அதாவது அவையத்துள் முந்தியிருப்பச்செயல் என்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க தனித்தன்மையோடு  விளங்கவேண்டும்.

3-வி--விழித்திரு;- ஆம் எப்பொழுதும் விழித்திரு. உன்னைச்சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனித்து அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லவைகளை உட்கொண்டு அல்லவைகளை தவிர்த்து செயல்பட எப்பொழுதும் விழித்திரு.

இவ்வாறு நீ அறிவு பசியோடு தேடினால்-  தனித்து உன்னை காட்டினால்  உன்னை சுற்றி நடப்பனவற்றை விழிப்போடு கண்டு செயல் பட்டால் பதவி
என்ற வெற்றியை நீ அடையலாம்

10 comments:

  1. அப்பா நல்லா இருக்கு. இன்னும் தொடர்ந்து எழுதுங்க.

    ஹி ஹி எனக்கு ஒரு பத்து பவுன்ல எங்கப்பா செயின் வாங்கித் தரணும்னு ஆசைப்படரேன். நீங்கதானே சொன்னீங்க ஆசைப்படுன்னு :)

    ReplyDelete
  2. அருமை.நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் வந்து செல்வேன்.

    ReplyDelete
  3. அருமையா இருக்கு அங்கிள் ...நன்றி

    ReplyDelete
  4. //ஆனால் ஆசையை ஒழித்தலும் கனவு கண்பதும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வ்ழிவகுக்காது //
    பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்!

    ReplyDelete
  5. அறிமுகம் - தொடர்ந்து ஆசைப்படு - என்று
    தத்துவத்தோடுகூடிய முன்னேற்றக் கருத்து
    அள்ளி வழங்கினீர்கள். நன்றி சார்!
    அடுத்து, உங்கள் புகைப்படமும்
    இணைப்பீர்கள் என எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
  6. உங்க‌ ஊர் தான் நானும்..

    ப‌திவிக்கு அருமையான‌ விள‌க்க‌ம்..‌

    ReplyDelete
  7. அன்பு மகள்.பதவி மேல் ஆசப்பட சொன்னேன். பவுன்மீது அல்ல. இருப்பினும் ஆசை காலத்தில் நிறைவேற்றப்படும்.
    அன்பு மகள்கள் அசியாஉமர், காயத்தரி, இலா உங்கள் குறிப்புகள் கண்டு உவகையுற்றேன். ந்ன்றி
    அன்பு நசீம், நாடோடி அவர்களுக்கு எனது நன்றி. தொடர்ந்து உங்களோடு எண்ணங்களை பகிர்ந்துகொள்ள விழைகின்றேன், அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  8. அங்கிள்...! எனக்குத் தெரிந்து செபா ஆன்ட்டியின் ப்ளாக்குக்கு அடுத்து உங்களுடையது பெரிய ப்ளாக் :) பெரியவங்க ப்ளாக் ஆரம்பித்தால் அதில் அனுபவமும் அறிவுரைகளும் நிறைய கிடைக்கும். அதை உங்கள் ஆரம்ப பதிவிலேயே காண முடிகிறது! வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன் :) வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. நன்றி. வயய்ஹான்வர்களின் அனுபவ்மும் இளைஞ்சர்களின் துடிப்பான செயல்பாடும் எதிர்கால இந்தியாவை நல்வழி படுத்தும். மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  10. ப, த, வி,
    முன்றும் முன்று முத்தாய் போட்டு இருக்கீங்க.
    உங்களை போல் பெரியவர்களின் அறிவுரைகள் எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும்.

    ReplyDelete