Friday 1 October, 2010

தீர்ப்பு தந்த பாடம்

அன்பு நண்பர்களே வணக்கம். அயோத்தி பிரச்சினையில் ஒரு தீர்ப்பு. வெற்றி தோல்வி இல்லாத ஒரு முடிவு. 
சின்ன ஒரு கதை. ஒரு பலசாலி அவனுக்கு அவனது கையே பலம் ஒரு நாள் அவன் கைகளில் உள்ள விரல்களுக்கிடயே ஒரு சண்டை.  கட்டை விரல் சொன்னது நான்தான் உங்களில் பலசாலி நான் இல்லையேல் உங்களால் எதையும் பிடிக்க இயலாது.  ஆள்காட்டி விரல் சொன்னது நான்தான் எதையும் குறிப்பிட்டு சொல்பவன் எனவே நான்தான் உபயோகமானவன். கையை நீட்டி பாருங்கள்  பெரியவன் நானே என்றது பெரியவிரல். தங்கமும் வைரமும் அணிவது எனக்கே என்றது மோதிர விரல். கடவுளையும் பெரியவர்களையும் வணங்கும்போது முதலில்  இருப்பது நானே என்றது சுண்டுவிரல்.

விரல்களுக்கிடயே சண்டை. அப்போது ஒரு  எதிராளி அவனை தாக்க வருகின்றான்.  பல்சாலி ஐந்து விரல்களையும் மடக்கி ஒரேகுத்தாக அவனை தாக்கி வீழ்த்துகின்றான். விரல்கள் உணர்ந்தன ஒற்றுமையே உயர்வு தரும். நண்பர்களே மார்க்கம் எதுவாக இருப்பினும் இந்தியர் என்ற  உறவில் ஒன்று படுவோம்.  வாழ்க பாரதம்

2 comments:

  1. போங்கப்பா! நம்ப அருமை உள்துறை அமைச்சருக்கு தீர்ப்பைக் கேட்டு மக்கள் கொந்தளிக்கவில்லையேன்னு வருத்தம். மக்கள் அமைதியாக இருப்பது பொறுக்கவில்லை. எப்படியெல்லாமோ தூபம் போட்டுக்கிட்டு இருக்கார். இந்த மாதிரி அமைச்சரை வச்சுக்கிட்டு என்ன பண்றது?!

    ReplyDelete
  2. கவி அப்பாவுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    அன்புடன் இமா

    ReplyDelete