Wednesday 29 September, 2010

நாளைய தீர்ப்பு

                                       
நாளைய தீர்ப்பு- நாடே எதிர்பார்க்கின்ற தீர்ப்பு. காசு பணத்திற்கு, வயல் வாய்க்காலுக்கு, குற்ற குறைபாடுகளுக்கு  நடுவர் தீர்ப்பை காணலாம். மனித உணர்வுகளுக்குமா தீர்ப்பு? மனித நேயத்தோடு அணுகவேண்டியதை சட்டத்தின் மூலமாக ஓர் தீர்வா? அரசியலும் ஆன்மீகமும் தள்ளி நின்றாலே சர்ச்சைக்குள்ள இடத்தை சார்ந்த சமானிய மக்களே இன்றும் சகோதர பாசத்தோடு இருக்கின்ற மனிதநேய உறவுகளே நல்ல தீர்ப்பை காண்பார்களே! எல்லா நதியும் சென்று சேர்வது சமுத்திரமே. நதி ஓடுகின்ற பாதையின் மண்ணின் தன்மையைப் பொறுத்து அதன் சுவை வேறுபடலாம். கடலில் கலந்தபின் அனைத்தும் ஒரு சுவைதானே. மார்க்கம் பலவாயினும் சென்று சேருமிடம் ஒன்று தானே.
எனது இந்திய உலக உறவுகளே தீர்ப்பு எதுவாகினும் அனைவரும் ஒருதாய் மக்கள் பாரததாயின் பிள்ளைகளே என அமைதி காத்து அரசியல் ஆன்மீகவாதிகளை புறம் தள்ளி ஒற்றுமை காண்போம்.
                    

7 comments:

  1. நல்ல கருத்து.தேவையான பதிவு.

    ReplyDelete
  2. எல்லாவற்றிலும் அரசியல் புகுந்துதானே நம் நாடு இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்கு.

    நாளைய தீர்ப்பையும் இந்த பாழாப்போன அரசியல்வியாதிகளும் ஆன்மீகவியாதிகளும் அரசியலாக்கி குளிர்காய ஆரம்பிச்சுடுவானுங்களே :(. மக்கள் உணர்ச்சிவசப் படாமல் இவனுங்க வலையில் விழாமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. அமைதி அதுதான் தேவை

    ReplyDelete
  4. தேவையான பதிவுசார்.

    சில சுயநல விஷக்கிருமிகள் இருக்கும்வரை நாட்டில் அமைதியை எதிர்பார்ப்பது நடக்ககூடிய காரியமே அல்ல என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  5. தீர்ப்பு எதுவாகினும் அனைவரும் ஒருதாய் மக்கள்///

    ரொம்ப நல்ல பதிவு

    ReplyDelete
  6. பொது ஜனம் தான் பாதிக்கபடுறோம்...எல்லாம் நம்ம தலை எழுத்துப்பா..

    ReplyDelete


  7. என் பிளாக் ஸ்பாட் குருவின் அப்பாக்கு நமஸ்காரம்!

    தீர்ப்பினால் கலவரம் வராமல் இருந்ததே நல்லது!

    ReplyDelete